பெண் டி.எஸ்.பி., தற்கொலை விவகாரம்: தந்தை தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் டி.எஸ்.பி., தற்கொலை விவகாரம்: தந்தை தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

Added : ஜன 10, 2020

கோவை: போலீஸ் அதிகாரிகள், 'டார்ச்சர்' காரணமாக, பெண், டி.எஸ்.பி., தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தந்தை தாக்கல் செய்த வழக்கை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, டி.எஸ்.பி., விஷ்ணு பிரியா, 2015ல், பணியில் இருந்த போது, துாக்கு போட்டு தற்கொலை செய்தார். போலீஸ் அதிகாரிகள், 'டார்ச்சர்' காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தந்தை ரவி புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரித்த, சி.பி.ஐ., 'புகாரில் ஆதாரமில்லை' எனக் கூறி, வழக்கை கைவிடுவதாக, கோவை, சி.ஜே.எம்., கோர்ட்டில் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரவி மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. ஐந்து போலீஸ் அதிகாரிகள், விஷ்ணுபிரியாவின் பெற்றோரிடம் வாக்குமூலம்பெறப்பட்டது.

விசாரணை முடிந்து, சி.ஜே.எம்., கோர்ட் நீதிபதி ரவி நேற்று பிறப்பித்த உத்தரவு: டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை சம்பவத்தில், போலீஸ் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை எனக் கூறி, தற்கொலை வழக்கை கைவிடுவதாக, சி.பி.ஐ., இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த இறுதி அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விஷ்ணுபிரியாவின் பெற்றோர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, அவரது வக்கீல் அருள்மொழி ஆகியோர் கூறியதாவது: இந்த உத்தரவு, ஏமாற்றம் அளிக்கிறது. மாவட்ட நீதிமன்றத்திலோ அல்லது ஐகோர்ட்டிலோ விரைவில் சீராய்வு மனு தாக்கல் செய்வோம்.

இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காரணத்தால், விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணமான, எஸ்.பி., செந்தில்குமார் மீது, தனி புகார் கொடுக்காமல் இருந்தோம். சி.பி.ஐ., அறிக்கை மீதான விசாரணை முடிந்து விட்டதால், செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, நாமக்கல் போலீசில் தனி புகார் அளிக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X