மரக்கன்றுகள் வளர்வதால் பாலம் வலுவிழக்கும் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகள் வளர்வதால் பாலம் வலுவிழக்கும் அபாயம்

Added : ஜன 10, 2020
 மரக்கன்றுகள் வளர்வதால்  பாலம் வலுவிழக்கும் அபாயம்

கடலுார்:கடலுார் ரயில்வே மேம்பாலத்தில் மரக்கன்றுகள் வளர்வதால் பாலம் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலுார் லாரன்ஸ்ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. பாலத்தை கடந்து தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் ஆங்காங்கே அரச மரக்கன்றுகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மரக்கன்றுகள் நாளுக்கு நாள் பெரியளவில் வளர்கிறது.இதனால், பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பாலம் வலுவிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அரச மரக்கன்றுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X