பொது செய்தி

இந்தியா

கல்வி நிறுவனங்களில் இ - சிகரெட்டுக்கு தடை

Added : ஜன 10, 2020
Advertisement

சென்னை: அனைத்து கல்வி நிறுவனங்களிலும், 'இ - சிகரெட்' பயன்படுத்தவும், விற்பனை செயயவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்தியாவில், எலக்ட்ரானிக் சிகரெட் என்ற, இ - சிகரெட்டின் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இளைய தலைமுறையினரை கவரும் விதத்தில், இ - சிகரெட்டுகள், ரசாயன கலவையால் மூடப்பட்டு, கவர்ச்சிகரமாக விற்கப்படுகின்றன. எனவே, இ - சிகரெட்டுக்கு, பல இளம் தலைமுறை மாணவர்கள், அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும், இ - சிகரெட்டின் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X