தமிழ்நாடு

ரூ. 588 கோடியில் தடுப்பணைகள் கட்டும் பணி தீவிரம்

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020
Advertisement
ரூ. 588 கோடியில் தடுப்பணைகள் கட்டும் பணி  தீவிரம்

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் நீர் மேலாண்மையை வலுப்படுத்துவதற்காக ரூ.588 கோடி மதிப்பில் 8 தடுப்பணைகள் மற்றும் கதவணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நிலத்தடி நீரை மேம்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் புதிய நீர்தேக்கங்கள், குட்டைகள், ஏரிகள், கசிவு நீர் குட்டைகள் நிறுவி நீர் மேலாண்மையை வலுப்படுத்தினர்.இதனை மேலும் செம்மைபடுத்தும் விதமாக முதல்வர் பழனிசாமி நீர்மேலாண்மை இயக்கம் என, தீவிர மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். பொது மக்கள் தன்னார்வ நிறுவனத்தினர் ஆகியோரின் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருகிறது.
இந்த இயக்கத்தின் முக்கிய திட்டம் தான் குடிமராமத்து. இத்திட்டம் விவசாயிகளிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. மழை மற்றும் வெள்ள காலங்களில் கெடிலம் ஆறு மற்றும் வெள்ளாற்றிலிருந்து கடலில் வீணாக கலக்கும் வெள்ள நீரை தடுத்து தடுப்பணைகளை கட்டி விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பயன்பெற பணிகள் செயல்படுத்தப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் 124.81 கோடியில் 8 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. அதில், 53.166 மில்லியன் கன அடி நீரை தேக்கலாம்.திட்டக்குடி வட்டம், கீழ்செறுவாய் கிராமத்தில், வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி, 22.50 கோடி மதிப்பில் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் முடிவுற்றது. இதன் 15.90 மில்லியன் கனஅடிநீரை சேமிக்க முடியும்.
இதன் காரணமாக 7க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்ட 253 ஆழ்துளை கிணறுகள் மூலமாக 1,008 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று, 752 விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர்.திட்டக்குடி வட்டம், கூடலுார் கிராமத்தின் அருகில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி 15.77 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நிறைவடைந்து இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்ட 472 ஆழ்துளை கிணறுகள் மூலமாக 1,888 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.பண்ருட்டி வட்டம், நரிமேடு அருகே சன்னியாசிப்பேட்டை - பலாப்பட்டு கிராமங்களுக்கு இடையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி 12 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
விலங்கல்பட்டு கிராமத்தின் அருகில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி 12.50 கோடி மதிப்பில் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடி கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே 17 கோடி ரூபாயில் தடுப்பணை, தே.பவழங்குடி கிராமத்தின் அருகில் 17 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு, பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.விருத்தாசலம் அருகே மணிமுத்தாறு குறுக்கே 10 கோடி ரூபாயில் தடுப்பணை, கீழப்பாளையூர் அருகே 18 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணகள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஆதனுார் - குமாரமங்கலத்தில் 84 மதகுகளுடன் கூடிய கதவணை கட்டும் பணிகள் 463.25 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடைந்தால் கடலுார் மாவட்டத்தில் ஓரளவு நிலத்தடி நீர் மேம்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X