பொது செய்தி

தமிழ்நாடு

மாடுபிடி வீரர்களுக்கு இன்று உடல் தகுதி பரிசோதனை: அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு ஏற்பாடு ஜரூர்

Added : ஜன 10, 2020
Advertisement
மாடுபிடி வீரர்களுக்கு இன்று உடல் தகுதி பரிசோதனை: அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு ஏற்பாடு ஜரூர்

பாலமேடு: உலகப்புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லுார், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை கலெக்டர் வினய் நேற்று ஆய்வு செய்தார். மாடு பிடி வீரர்களுக்கான உடல் தகுதி பரிசோதனை இன்று (ஜன.,10), காளைகளுக்கான உடல் தகுதி தேர்வு ஜன.,13ல் நடக்கிறது.மதுரையில் ஜன.,15 அவனியாபுரம், ஜன.,16 பாலமேடு, ஜன.,17 அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கலெக்டர் வினய் ஆய்வு செய்தார்.

கலெக்டர் வினய் கூறியதாவது: ஜல்லிக்கட்டில் 700 காளைகள் வரை பதிவு செய்யப்படும். கடந்தாண்டு ஏற்பட்ட சில நடைமுறை சிக்கல் இந்தாண்டு நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாடுகள், வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. உடல் தகுதி பரிசோதனை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 21 வயதுக்கு மேற்பட்டோர் வீரர் உடல் தகுதி பரிசோதனையில் கலந்து கொள்ளலாம்.

பரிசோதனை முடிந்து டோக்கன் பெற்ற வீரர்கள், மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி ஜல்லிக் கட்டு நடத்தப்படும். மாடுகள் அனைத்தும் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விட முடியாத பட்சத்தில் விழா நிறைவுற்றாலும் எஞ்சிய மாடுகளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விட அனுமதிக்கப்படும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவுபடி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி இணைந்து செயல்படும், என்றார்

தாவி குதிக்கும் பயிற்சிஅலங்காநல்லுார் குறவன்குளம் அஸ்வின், வாசன் கூறியதாவது: சிறு வயது முதல் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறேன். மாதிரி வாடிவாசல் அமைத்து காளைக்கு பயிற்சி அளிக்கப்படும். பள்ளம் தோண்டியும், வாடிவாசல் முன் இரண்டடி உயரத்துக்கு கம்பு வைத்து காளைக்கு தாவி குதிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. போக்குக்காளை எது, முட்டுக்காளை எது என காளையின் அசைவுகளை வைத்து துல்லியமாக கணித்து விடுவோம். தலையை துாக்கி பார்த்தாலும், கட்டையில் முட்டினாலும் மோசமான காளை, மடக்கி பிடிப்பது எளிதானதல்ல என முடிவுக்கு வருவோம். காளையின் நேக்கு போக்கு தெரிந்து மடக்குவோம் என்றார்.
பல அடுக்கு இருக்கைகள்அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு விழாக்குழு நிர்வாகிகள் சுந்தரராஜன், சுந்தரராகவன் கூறியதாவது: காளியம்மன், முத்தாலம்மன், முனியாண்டி கோயில் விழாக்களுக்கான காப்பு கட்டு கடந்த டிச.,29ல் நடந்தது. முத்தாலம்மன் கோயில் விழாவிற்கான ஜல்லிக்கட்டு ஜன., 17ல் நடக்கிறது. கூடுதல் இருக்கைகள் அமைக்க கேலரியில் பல அடுக்குகள் அமைக்க ஆலோசித்து வருகிறோம் என்றார்.முதல்வருக்கு அழைப்பு

பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக் கமிட்டி நிர்வாகிகள் ராஜேந்திரன், வேலு, மனோகர வேல்பாண்டியன் கூறியதாவது: வெற்றி பெறும் வீரர்கள், காளையின் உரிமையாளர்களுக்கு தங்கக்காசு, கார், டூவீலர், நாட்டு மாடுகள் பரிசாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.



ஒரு வேட்டி நால்வருக்குபாலமேடு மாரிமுத்து, நடராஜன் கூறியதாவது: பாலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழு உறுப்பினராக உள்ளோம். இதுபோன்ற தடபுடல் ஏற்பாடு முன்பு கிடையாது. வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் காளை தாவி குதித்து ஓடும். நான்கைந்து வீரர்கள் காளையை விரட்டி செல்வர். காளையின் திமிலை பிடித்து எல்லைக்கோடு வரை செல்லும் வீரருக்கு பரிசாக ஒரு வேட்டியை விழாக்குழுவினர் துாக்கி வீசுவர். அதை நான்காக கிழித்து முண்டாசு கட்டிக் கொள்வோம். அது பெருமையாகவும், கவுரவமாகவும் கருதினோம். வீரரின் வயது 21 என நிர்ணயித்தது வரவேற்கத்தக்கது. மாடுபிடி வீரர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், என்றனர்.


பாலமேடு கண்ணகி கூறியதாவது: ஜல்லிக்கட்டில் முன் வாடிவாசல் வழியாக கிராம கமிட்டி, மஞ்சமலை சுவாமி, அய்யனார் சுவாமி, பட்டாளம்மன், காளியம்மன், பாலமுருகன் சுவாமி, பத்ரகாளியம்மன் காளைகள் அவிழ்த்து விடப்படும். ஆறாவது காளையாக பாலமுருகன் கோயில் காளை முருகனை அவிழ்த்து விடுவர். காளையை தொட்டு வணங்கியும், மரியாதை செலுத்தியும் கிராம மக்கள் வழிபடுவர். கோயில் காளைகளை வீரர்கள் பிடிக்க மாட்டார்கள். முருகன் காளை குடும்பத்தில் ஒருவன். எங்கள் வீட்டின் செல்லப்பிள்ளை, என்றார்.

.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X