பொது செய்தி

தமிழ்நாடு

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

Added : ஜன 10, 2020
Advertisement
 திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ராதரிசனம், திரு ஊடல் உற்சவம் நேற்று நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாணிக்க வாசகர் உற்சவம் கடந்த 31ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி கடந்த 8ம்தேதி மாலை உற்சவர் நடராஜர், சிவகாமி அம்பாள் நுாற்றுக்கால் மண்டபத்தில் உள்ள சபை மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு உற்சவர் நடராஜர் சிவகாமசுந்தரிக்கு 51 வகையான திரவியப் பொடிகள், 21 வகையான பழங்கள் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடந்தது.
பின் கலச அபிஷேகம், உற்சவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை, மாலை 5 மணிக்கு நடராஜர் ஆருத்ரா தரிசன காட்சி, 5:30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு திருவூடல்உற்சவம் திருக்குளத்தில் நடந்தது. இறைவனோடு இறைவிக்கு ஊடல் ஏற்பட்டு, திருக்கதவை திருக்காப்பிட்டு கொள்ளும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.சுந்தரர், பறவை நாச்சியார்களுடன் சென்று இறைவனின் அருமை, பெருமைகளை இறைவியிடம் எடுத்து கூறி, துாது செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய் தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X