சென்னை,: திட்டமிடுதல் குறித்து, ஐ.ஐ.டி.,யின் ஆராய்ச்சி கட்டுரைக்கு, இங்கிலாந்து பிரதமரின் ஆலோசகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னை ஐ.ஐ.டி.,யின் பேராசிரியர்கள், பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்து, அவற்றை கட்டுரையாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் வெளியிடுகின்றனர்.
விண்வெளி அறிவியல் துறையின் பேராசிரியர் சுஜித், இன்ஜினியரிங் துறையில் திட்டமிடுதல் தொடர்பான, ஆராய்ச்சி கட்டுரையை எழுதியிருந்தார். இதை பார்த்த, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தலைமை சிறப்பு ஆலோசகர் டோமினிக் கம்மிங்ஸ், தன் இணையதள பக்கத்தில் பாராட்டியுள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.
'சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் கூறியுள்ள முன்கூட்டியே திட்டமிடும் அமைப்புகளை, நிதித்துறை முதல், தொற்று நோய் குணப்படுத்துதல் வரையிலும் அமல்படுத்த முடியும்' என்றும், அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சி கட்டுரையின் கருத்துக்கள் வழியாக, சமூக மற்றும் பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த, நிபுணர் குழுவையும் அவர் அமைத்துள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி.,தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE