விளம்பர பலகை மீது போஸ்டர்: சுற்றுலா பயணிகள் தவிப்பு

Added : ஜன 10, 2020
Advertisement
 விளம்பர பலகை மீது போஸ்டர்: சுற்றுலா பயணிகள் தவிப்பு

திருப்புவனம்:திருப்புவனம் வட்டார சுற்றுலா பகுதிகள், முக்கிய இடங்கள் குறித்த அரசு விளம்பர பலகைகள் மீது போஸ்டர்கள் ஒட்டுவதால் சுற்றுலா பயணிகள் குழப்பமடைகின்றனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் கீழடி அகழாய்வு தளம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், புஷ்பவனேஸ்வரர் ஆலயம், மாரநாடு கருப்பண்ணசாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இவற்றிற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். வெளியூர் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நலன் கருதி அரசு சார்பாகவும் கோயில் நிர்வாகங்கள் சார்பாகவும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஸ்தல வரலாறு, கோயில் திறக்கப்படும் நேரம், சிறப்பு பூஜைகள், தங்க தேர் இழுக்கும் நேரம், பூஜை கட்டணம், கோயில்களுக்கு செல்லும் பாதை விபரங்கள், பஸ் போன்ற வாகனங்களுக்கு உரிய கட்டணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.இவற்றில் பொதுமக்கள் பலரும் காதணி விழா, திருமண விழா, பிறந்த நாள் போஸ்டர், உள்ளிட்ட பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

பணம் செலவு செய்து வைக்கப்பட்ட போர்டுகள் பழுதடைந்து பயனின்றி காட்சி பொருளாக உள்ளன. அரசின் விளம்பர போர்டுகள் மீது போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என தடை இருந்தாலும் பலரும் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அரசின் விளம்பர பலகைகள் மீது போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X