பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் புத்தக கண்காட்சி துவக்கம்

Added : ஜன 10, 2020
Advertisement
 குழந்தைகள் புத்தக கண்காட்சி துவக்கம்

சிவகங்கை:சிவகங்கை வியான்னி மகாலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 3 நாள் குழந்தைகள் புத்தக கண்காட்சியை கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார்.

வரவேற்பு குழு தலைவர் காளிராசா தலைமை வகித்தார். கோளரங்கத்தை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து துவக்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, செயலாளர் சாஸ்தா சுந்தரம், பொருளாளர் ஆரோக்கியமேரி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சோழபுரம் ரமணவிகாஷ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், தமிழாசிரியர் இளங்கோ, சங்கரசுப்பிரமணியன், செல்வகுமார், குமரேசன், ஸ்ரீவித்யா பங்கேற்றனர்.

பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் புத்தக கண்காட்சி மற்றும் அறிவியல் சார்ந்த கோளரங்கம், தொலைநோக்கி, குழந்தைகள் படத்தை கண்டு ரசித்தனர். ஜன.,12 வரை தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். புத்தகம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் எழுத்தாளர் சார்பில் மரக்கன்று வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X