பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடி அருகே மஞ்சுவிரட்டுக்கு தயாராகும் காளைகள்

Added : ஜன 10, 2020
Advertisement
 காரைக்குடி அருகே மஞ்சுவிரட்டுக்கு தயாராகும் காளைகள்

காரைக்குடி:காரைக்குடி பகுதியில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கு,காளை வளர்ப்போர் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டிபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.சிவகங்கை மாவட்டத்தில்சிராவயல், கண்டுபட்டி உட்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் மஞ்சுவிரட்டு நடக்கும். கோட்டையூர், பள்ளத்துார், கல்லல்உள்ளிட்ட இடங்களில் காளை வளர்ப்போர் காளைகளை தயார்செய்து வருகின்றனர்.

மஞ்சுவிரட்டு தொடங்கும் 15 நாட்களுக்குமுன்பாகவே, காளைகளுக்கு தினமும் பயிற்சி அளிக்கின்றனர். காளைகளுக்கு, காலை இஞ்சி,சின்னவெங்காயம், பூண்டு, பச்சமிளகாய் கலந்த கசாயம் வழங்கப்படுகிறது. இது, காளையின் வயிற்று புண், செரிமானம்உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்து நல்ல பசியை துாண்டும்.தொடர்ந்து பேரிச்சை, கம்பு, கொள்ளு, உள்ளிட்ட உணவுகள்வழங்கப்படுகிறது. மேலும் காளைகளுக்கு, மணலில்குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தம்பிதுரை கூறுகையில்; மஞ்சு விரட்டிற்காக காளைகளை தயார் செய்து வருகிறோம். எனது காளையின் பெயர் ராமு. காளைகளை எங்கள்குடும்பத்தில் ஒருவராகவே வளர்த்து வருகிறோம். பிள்ளைகளுக்கு செலவு செய்வதை விட காளைகளுக்கு அதிகம்செலவு செய்கிறோம்.

காளைகளுக்கு தண்ணீரில் நீந்தும்பயிற்சி, மணல்மேட்டில் கொம்புகளை குத்த விடுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளித்து வருகிறோம். இதுவரை 100க்கும் மேற்பட்ட போட்டிகளில், எங்கள் காளை பங்கேற்று கட்டில், பீரோ, குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்றிருக்கிறோம். என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X