சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை படுத்திய கணவர் கைது

Added : ஜன 10, 2020
Advertisement

கடலுார்:வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த தொண்டமாநத்தத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் மனைவி ராஜலட்சுமி, 30; புதுச்சேரி மாநிலம், மூலகுளத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை. அதே பள்ளியில் பணியாற்றி வந்தவர் மதுக்கரையை சேர்ந்த ராஜீவ், 29.இருவருக்கு காதலித்து கடந்த 2.7.18ம் தேதி கடலுாரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில், ராஜீவ் தாய் மீரா, உறவினர் மதுக்கரை வீரமணி மனைவி ரங்கநாயகி, அன்னகாரங்குப்பம் கண்ணதாசன் மனைவி அம்பிகா ஆகியோருடன் உதவியுடன் திருமணம் செய்துகொண்டார்.
பின் 14.9.19ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையிலங் திருவந்திபுரம் கோவிலில் திருணம் நடந்தது. ராஜலட்சுமி திருமணம் முடிந்து ஓராண்டு ராஜீவ் வீட்டில் வசித்தபோது, ராஜீவ், மீரா, ரங்கநாயகி, அம்பிகா ஆகியோர், வரதட்சணையாக நகை மற்றும் பணம் கேட்டு கொடுமைப் படுத்தி, வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.இது குறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜீவை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X