டில்லியில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கைது

Added : ஜன 10, 2020 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: டில்லியில் சந்தேகத்திற்கிடமான மூன்று பேரை போலீசார் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து டில்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் திருவள்ளுர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கே.பி.சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய ஆறுபேர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் கொலையாளிகள் நேபாளத்திற்கு சென்று அங்கிருந்து இந்தியாவிற்குள் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. அவர்கள் தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் உத்தரபிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிறப்பு போலீஸ் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து டில்லியின் வசிராபாத் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் போலீசாரை நோக்கி சுட்டனர். போலீசாரும் பதிலுக்கு சுட்டு மூன்று பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.

காஜா மொய்தீன்52 அப்துல் சமது28 சையது அலி நவாஸ்32 என்ற அந்த மூவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதனால் அந்த அமைப்பு நடத்துவதை போன்ற பயங்கரவாத தாக்குதலை இங்கு நிகழ்த்த திட்டமிட்டிருந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் கே.பி.சுரேஷ் கொலையில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

டில்லியில் 26ம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றுவார். இவ்விழாவில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் டில்லியில் பயங்கரவாத தாக்கல் நடத்த திட்டமிட்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜன-202001:43:48 IST Report Abuse
rajesh சைக்கோ, சைமன், சுடலை, சீட்டுகுருவி பூந்தி, குருமா, அமைதி மார்க்கம் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்....
Rate this:
Share this comment
RajanRajan - kerala,இந்தியா
10-ஜன-202010:26:22 IST Report Abuse
RajanRajanவரமாட்டானுங்களே. வந்தா NIA அப்படியே விசாரணைன்னு அள்ளி கொண்டு போய்டுவாங்கல்லே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X