வெளிநாடு செல்ல கார்லஸ்க்கு தடை

Added : ஜன 10, 2020
Advertisement

பெய்ருட்: கிழக்காசிய நாடான ஜப்பானை சேர்ந்த 'நிசான்' கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்தவர் கார்லஸ் கோஸான் 65. இவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக ஜப்பானில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். வழக்கை சந்திக்க வேண்டிய நிலையில் மத்திய கிழக்கு நாடான லெபனானுக்கு சமீபத்தில் தப்பினார்.
இவர் மீது 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசார் 'ரெட் கார்னர்' நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் லெபனானில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய கார்லஸ் கோஸானுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X