தியாகிகளை கவுரவப்படுத்த கலெக்டர் உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தியாகிகளை கவுரவப்படுத்த கலெக்டர் உத்தரவு

Added : ஜன 10, 2020

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினவிழாவின் போது சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஜன. 26 ல் குடியரசு தினத்தை கொண்டாடுவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து சிவகங்கையில் அனைத்துத்துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், குடியரசு தினத்தை விழாவை சிறப்பாக கொண்டாடும் அதே வேளையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளையும் அழைத்து கவுரப்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குநர் அருண்மணி, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வகுமாரி, சங்கரநாராயணன் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X