சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடியுரிமை கணக்கெடுப்பு புரளி: கணக்கெடுக்கும் குழுவிற்கு எதிர்ப்பு

Added : ஜன 10, 2020
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துாரில் மத்திய அரசின் திட்டப் பணிகளுக்காக கணக்கெடுக்க வந்த குழுவினரை குடியுரிமைக் கணக்கெடுப்பு எடுக்க வந்ததாக எழுந்த புரளியை அடுத்து சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திருப்புத்துார் புதுப்பட்டியில் நேற்று சிலர் ஆதார்,வாக்காளர் அட்டை, ஸ்மார்ட் கார்டு விபரங்களை அரசு நலத்திட்ட உதவிக்கு என்று கூறி சேகரித்துள்ளனர்.இந்த குழுவினர் வந்த வாகனத்தில் மத்திய அரசு பணி, வீட்டு எண் சர்வே மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் ஆணையம்/சி.சி.ஐ.ஐ. என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இவர்கள் குடியுரிமைக்கான கணக்கெடுப்பு நடத்த வந்ததாக கருதிய அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் ஆனந்தி, எஸ்.ஐ.முத்துகிருஷ்ணன் ஆகியோர் கணக்கெடுப்பு நடத்த வந்தவர்களிடம் விசாரித்தனர்.குழுவில் இருந்த கோல்கட்டாவைச் சேர்ந்த சித்தாங்சூ தாஸ் என்பவரிடம் விசாரித்தனர். அவர் தனியார் ஏஜன்சி நிர்வாகி என்பதும், மத்திய அரசின் திட்டப்பணிக்கான கணக்கெடுப்பிற்காக பேரூராட்சி அனுமதி பெற்று நடத்தியதும் தெரிந்தது.

தற்போது ஏற்பட்ட குழப்பத்தால் பேரூராட்சியினர் அவர்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்து கணக்கெடுப்பாளரை திருப்பி அனுப்பியது.பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், பல பேரூராட்சிகளில் முன்பே இந்த பணி முடிந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தல் காரணமாக இங்கு தாமதமாக வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலையால் இந்த கணக்கெடுப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X