டிராவில் முடிந்த மாநில கிரிக்கெட்

Added : ஜன 10, 2020
Advertisement

கோவை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த அரையிறுதிப்போட்டியில் நாமக்கல் அணி, கோவை அணிகள் மோதின. முதலில் விளையாடிய கோவை அணி, 79.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 211 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய நாமக்கல் அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 12 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 31 ரன் எடுத்தது.இரண்டாம் நாள் நடந்த போட்டியில், நாமக்கல் அணி, 90 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 222 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. அணியில் காளீஸ்- 105, சித்தார்த் குமார்- 54 ரன் எடுத்தனர். முதல் இன்னிங்சில் அதிக ரன் எடுத்த நாமக்கல் மாவட்ட அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X