ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் வெற்றி : கோவை விழா ஆண்கள் கபடியில் 'கிடுக்கிப்பிடி'

Added : ஜன 10, 2020
Advertisement

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் நடந்த கோவை விழா ஆண்கள் கபடி இறுதிப் போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி அணி வெற்றி பெற்றது.போட்டிகளை கம்ப்யூட்டர் அறிவியல் துறை துணை பேராசிரியர் கிருஷ்ணகுமார் துவக்கி வைத்தார். நாக் அவுட், லீக் முறையில் நடத்தப்பட்டன. முதல் நாக் அவுட் போட்டியில், ஸ்ரீ குரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, அண்ணா பல்கலை அணியை, 32:20 என்ற புள்ளி கணக்கில் வென்றது. முதல் லீக் போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி அணி, குமரகுரு இன்ஜினியரிங் கல்லுாரி அணியை, 40:13 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.இரண்டாவது லீக் போட்டியில், தனலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரி அணி, ஸ்ரீ குரு தொழில்நுட்பக் கல்லுாரி அணியை, 38:16 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.மூன்றாவது லீக் போட்டியில், தனலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரி அணி, குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணியை, 29:20 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.நான்காவது போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி அணியும், ஐந்தாவது போட்டியில், ஸ்ரீகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணியும் வென்றன.இறுதிப்போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி அணி, தனலட்சுமி இன்ஜினியரிங் கல்லுாரி அணியை, 27:22 என்ற புள்ளிக்கணக்கில் வென்று கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணிக்கு, பரிசு மற்றும் கோப்பையை முன்னாள் மாணவர் அருண் ராமசாமி வழங்கினார்.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தாமஸ் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X