நகராட்சி பள்ளிகளில் சத்துணவு கேள்விக்குறி: அமைப்பாளர், சமையலர் இல்லாமல் தவிப்பு

Added : ஜன 10, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை நகராட்சி பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இன்றி மாணவர்கள் உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட 48 காலனி நகராட்சி உயர்நிலை பள்ளியில் 48 காலனி, வந்தவாசி, அல்லுார், பனங்காடி, ரோஸ்நகர், அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த 157 மாணவர்கள் படிக்கின்றனர். கோட்டைமூலை நகராட்சி பள்ளியில் 20, தினசரி சந்தைக்குள் உள்ள நகராட்சி முஸ்லிம் பள்ளியில் 15 மாணவர்கள் என 192 மாணவர்கள் படிக்கின்றனர்.

தினமும் 100 மாணவர்கள் வரை சத்துணவு சாப்பிடுகின்றனர். இதற்காக நகராட்சி நிர்வாகம் காய்கறி, சிலிண்டர் செலவு உட்பட வாரத்திற்கு 956 ரூபாய் செலவழிக்கிறது. நகராட்சி யில் நிதியை பெற்று இங்குள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர்கள் தான் மதிய உணவு தயாரித்து வழங்க வேண்டும். ஆனால், இங்குள்ள சத்துணவு மையங்களில் 2017 முதல் அமைப்பாளர்கள் இல்லை. சில பள்ளிகளில் சமையலர், உதவியாளர் இல்லை.

இதனால் பள்ளி ஆசிரியர்களே காய்கறி வாங்கி வந்து, சமையல் செய்து தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு நிதியும் முறையாக வழங்காததால், கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் சத்துணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்களை நிரப்பவேண்டும். மேலும், தடையின்றி சத்துணவு வழங்க நிதி அளிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X