பொது செய்தி

தமிழ்நாடு

'மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்...'

Added : ஜன 10, 2020
Advertisement
 'மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்...'

பீளமேட்டிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை அதிகாலையில் திருப்பாவையின், 26ம் பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.கோவிலின் சிறப்புபீளமேடு கரிவரத ராஜ பெருமாள் கோவில், நுாற்றாண்டு பழமையானது. இக்கோவிலில் வீற்றிருக்கும் கரிவரதராஜ பெருமாளை மனமுருகி வழிபாடு செய்தால், நினைத்த காரியம் நிறைவேறும். இது ஒரு பிரார்த்தனை ஸ்தலம். இங்கு வழிபாடு செய்யும் இளம்பெண்களுக்கு, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.மார்கழி மாதத்தையொட்டி, இக்கோவிலில் நாளை அதிகாலை, 'மாலே மணிவண்ணா, மார்கழி நீராடுவான்...' என்று துவங்கும்திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.பாடலின் பொருள்நீலமேக சாமள வண்ணனே, ஆலிலை மேல் பள்ளி கொண்டவனே, அடியார்களை ஆட்கொள்ளும் திருமாலே, இந்த மார்கழி நோன்பை, பெரியோர்கள் எப்படி பின்பற்ற வேண்டும் என்று கூறினார்களோ, அப்படியே நாங்களும் உன்னிடம் கூறுகிறோம்.நோன்பு சிறப்பாய் நடத்த எங்களுக்கு, பால் போன்ற நிறமும், பாஞ்ச சன்னியம் என்ற பெயருடன் விளங்கிய உன் எதிரிகள் எல்லாம் தன் பேரொலியால் நடுங்கி அழிக்கும் சங்குகளை கொடுப்பாயாக.நாங்கள் நோன்புக்கு புறப்படும் போது கொட்டுவதற்கு, பெரிய முரசுகளை கொடு. கருவிகள் மட்டுமின்றி, உன் பெருமைகளை பல்லாண்டு பாடுகின்ற பாகவத சிரேஷ்டர்கள், தலையில் பனி படாமல் இருக்க, கட்டிக்கொள்ள துணிகள் உள்ளிட்டவற்றை கொடுப்பாயாக என்று வேண்டுகின்றனர் சிறுமியர் என்பதே, இப்பாடலின் பொருள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X