மாவட்ட டி 20 கிரிக்கெட் போட்டி : சி.எம்.எஸ்., மாணவர்கள் 'அடடா!'

Added : ஜன 10, 2020
Advertisement

கோவை:ரத்தினம் கல்லுாரி மைதானத்தில் நடந்த, டி 20 கிரிக்கெட் போட்டியில், சி.எம்.எஸ்., கல்லுாரி அணியின், எம்.ரமேஷ் ஒரு ரன்னில் சதத்தையும், சந்தோஷ் ஒரு ரன்னில், அரை சத வாய்ப்பையும் இழந்தனர்.ரத்தினம் கல்விக் குழுமம் சார்பில், மாவட்ட அளவில், கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான, டி 20 கிரிக்கெட் போட்டி, பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரியில் உள்ள, கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
நேற்று நடந்த போட்டியில், சி.எம்.எஸ்., மற்றும் ஜெ.சி.டி., கல்லுாரிகள் மோதின. முதலில் 'பேட்' செய்த, சி.எம்.எஸ்., அணி, 20 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு, 222 ரன்கள் குவித்தது.இந்த அணியின், எம்.ரமேஷ்,99 ஒரு ரன்னில் சதத்தையும், சந்தோஷ் 49 ஒரு ரன்னில் அரை சத வாய்ப்பையும் இழந்தனர்.கடின இலக்கை சேஸ் செய்த, ஜெ.சி.டி., அணி, 17 ஓவர்களில், 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, 122 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்த அணியின் அனில் அதிகபட்சமாக, 40 ரன்கள் அடித்தார். சி.எம்.எஸ்., கல்லுாரியின், ரமேஷ், போஸ் ஆகியோர் தலா, 3 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X