தமிழ்நாடு

அவதி:வீடு கட்ட முடியாமல் மக்கள்; மானாமதுரையில் மணல் தட்டுப்பாடு

Added : ஜன 10, 2020
Advertisement

மானாமதுரை:மானாமதுரை ஒன்றியத்தில் மணல் தட்டுப்பாடு காரணமாக பி.எம்.எ.ஒய்., எனப்படும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் வீடுகளை கட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மானாமதுரை வைகை ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்கப்பட்டு கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது மானாமதுரை பகுதியில் மாட்டு வண்டி களில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு ஒரு ஆண்டாகி விட்டதால் திருச்சியில் உள்ள மணல் குவாரிகளில் இருந்து வரும் மணல் அதிக விலைக்கு விற்கப்படுவதாலும், மணல் தட்டுப்பாடு காரணமாக அதற்கு பதிலாக பயன்படுத்தப்படும் எம் சாண்ட் தற்போது அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

அரசு மானியத்தில் பசுமை வீடு மற்றும் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான பயனாளிகள் கட்டுமானப் பணிக்கு மணல் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். பிரதம மந்திரி யோஜனா வீடு கட்டும் திட்டத்தில் அரசு வழங்கும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மட்டும் மானாமதுரை ஒன்றியத்தில் 500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் மணல் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X