மாவட்ட கூடைப்பந்து சர்வஜனா, யங் பிளட் வெற்றி

Added : ஜன 10, 2020
Advertisement

கோவை:கோவை மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடக்கும், மாவட்ட அளவில், சிறுவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில், சர்வஜனா மற்றும் யங் பிளட் அணிகள் வெற்றி பெற்றன.லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்துார் ஓரியன், ராக்கர்ஸ் கூடைப்பந்து சங்கம் சார்பில், பத்தாவது ஓரியன் கோப்பைக்கான, கூடைப்பந்து போட்டி, கோவை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, கூடைப்பந்து மைதானத்தில், நடக்கிறது; 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.காலிறுதி போட்டியில், சர்வஜனா அணி, டெக்சிட்டி அணியை, 45 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. சர்வஜனா பள்ளியின் மிலோலி 13, விகாஷ் 9 புள்ளிகள் பெற்றனர். டெக்சிட்டியின் சஞ்சீவ் 2 புள்ளிகள் பெற்றார்.யங் பிளட் அணி, சுகுணா பிப் அணியை, 50-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. யங் பிளட் அணியின், சஞ்சீவ், 20, விஷ்ணு, 10 புள்ளிகள் பெற்றனர். சுகுணா பிப் அணியின் ஆதவன், 5 புள்ளிகள் பெற்றார்.ஆர்.கே.எஸ்.அணி, மல்லையன் அணியை, 38-21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. ஆர்.கே.எஸ்., அணியின் விகாஸ், 10, தர்சன், 9 புள்ளிகள் பெற்றனர். மல்லையன் அணியின் நிரஞ்சன், 8 புள்ளிகள் பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X