பொது செய்தி

தமிழ்நாடு

'அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசு வேண்டும்'

Added : ஜன 10, 2020
Advertisement

கோவை:ஓய்வூதியதாரர்களுக்கு, 14ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகை கிடைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கோவை மாவட்ட கருவூலத்துறை பிரிவின் கீழ், அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற, 28 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.இவர்களில், 'சி', 'டி' பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு, அரசு அறிவித்துள்ள படி, பொங்கல் பரிசுத்தொகையாக, 500 ரூபாய் வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு உரிய நேரத்தில் பரிசுத்தொகை சென்றடையும் வகையில் 'பில்' போடப்பட்டு வருகிறது.
வரும், 14ம் தேதிக்குள் அவர்கள் கணக்கில் செல்லும் வகையில் பணிகள் முடிக்கப்படும் என்கின்றனர் கருவூலத்துறை அலுவலர்கள். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பலராமன் கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளாக, 'ஏ', 'பி' பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, பொங்கல் பண்டிகை பரிசுத்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களை பதவிகளை கொண்டு பிரிப்பது ஏற்புடையதல்ல. ''அனைத்து தரப்பு ஓய்வூதியதாரர்களுக்கும், பரிசுத்தொகை வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X