திருப்புவனம் வட்டார காட்டில் தீ | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புவனம் வட்டார காட்டில் 'தீ'

Added : ஜன 10, 2020
Share
 திருப்புவனம் வட்டார காட்டில் 'தீ'

திருப்புவனம்:திருப்புவனம் வட்டாரத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள காடுகளை மர்மநபர்கள் சிலர் தீ வைத்து அழித்து வருகின்றனர்.

திருப்புவனம் வட்டாரத் தில் அரசனுார், இலுப்பகுடி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளன. இதுதவிர கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர் நிலைகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றில் மா, புளி, புங்கை, வேம்பு உள்ளிட்ட மரங்களும் உள்ளன. கால்வாய்களை ஒட்டிய பகுதிகளில் மூங்கில் மரங்களும் வளர்ந்துள்ளன. வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த காடுகளில் மர்மநபர்கள் சட்டவிரோதமாக தீவைத்து அழித்து வருகின்றனர்.

தீவைப்பு சம்பவம் காரணமாக பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை இடம் பெயர்ந்து வருகின்றன. போதிய கண்காணிப்பு இல்லாததால் மரங்களின் வேர்பகுதிக்கு தீவைக்கும் நபர்கள் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மரங்களை வெட்டி எடுத்து செல்கின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் மடப்புரம், கணக்கன்குடி, ஏனாதி, தேளி, மஞ்சக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மூங்கில் காடுகளில் தீவைத்ததால் மூங்கில் எரிந்து சாம்பலாகி விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் காடுகளுக்கு தீவைக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X