பொது செய்தி

தமிழ்நாடு

உணவும் இசையும் ரு(ர)சிக்கலாம் வாங்க! இன்று துவங்குகிறது உணவு திருவிழா

Added : ஜன 10, 2020
Advertisement

கோவை:கோவை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், மாபெரும் உணவு திருவிழா, கொடிசியா திறந்தவெளி மைதானத்தில், இன்று துவங்குகிறது. கோவை உணவு திருவிழாவின் ஒருபகுதியாக நடக்கும் இந்நிகழ்ச்சியை, 'மில்கி மிஸ்ட்' மற்றும் 'செவன் அப்' நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.இசை கச்சேரியுடன் உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5:00 மணிக்கு துவங்கும் உணவு திருவிழா, இசை கச்சேரி சங்கமத்துடன், இரவு 11:00 மணி வரை நடக்கிறது. மூன்று நாட்களும், ஜமாப், பறை, சிலம்பாட்டம் நடக்கும்.கொங்கு மண்ணின் பிரத்யேக உணவு சுவையை அறியாதோர், இந்த உணவு திருவிழாவில் ருசித்து தெரிந்து கொள்ளலாம். தென்னிந்திய உணவுகள் மட்டுமல்ல, வட இந்திய உணவுகள், நொறுக்கு தீனி வகைகள், ஐஸ்கிரீம் வகைகள் என, அனைத்து தரப்பினரும், வயிறு நிறைய சாப்பிடும் வகையில், 140 வகையான ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. ரெஸ்டாரன்ட்டில் நிர்ணயிக்கப்படும் விலையை விட குறைந்த விலையில், உணவுகள் வாங்கலாம்.துவக்க நாளான இன்று, இசைக்கலைஞர் ஸ்டீபன் தேவசி குழுவின் கச்சேரி நடக்கிறது. நாளை, பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் தேனிசையில் நனைக்கவுள்ளார். இறுதிநாளான வரும் 12ம் தேதி, பாடகர் திவாகர் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.உணவு திருவிழா தலைவர் பாலச்சந்தர் கூறுகையில்,'' உணவு திருவிழாவிற்கு, நுழைவு கட்டணம் 120 ரூபாய். 12 வயது வரையுள்ள, குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். அந்தந்த ஸ்டால்களில், பட்ஜெட்டுக்கு ஏற்ப உண்டு மகிழலாம். குடும்பத்துடன் வந்து, மாலை நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க, ஏற்ற இடமாக இருக்கும். நுழைவு டிக்கெட் நேரிலும், 'புக் மை ஷோ' செயலியிலும், பெறலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X