பொது செய்தி

இந்தியா

விநாயகம்பட்டில் பண்ணைப் பள்ளி நிகழ்ச்சி

Added : ஜன 10, 2020
Advertisement
 விநாயகம்பட்டில்  பண்ணைப் பள்ளி நிகழ்ச்சி

திருக்கனுார்:திருக்கனுார் பண்ணைத் தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ், எண்ணெய் வித்து பயிரான வேர்க்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி நிகழ்ச்சி, விநாயகம்பட்டில் நடந்தது.துணை வேளாண் இயக்குனர் வேணுகோபால ராவ் தலைமை தாங்கினார்.
வேளாண் அலுவலர் தனசேகரன் பண்ணைப் பள்ளியின் அவசியம் குறித்து பேசினார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் நிபுணர் ரவி, வேர்க்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.பூச்சியியல் வல்லுநர் விஜயக்குமார் வேர்க்கடலையில் பூச்சி மேலாண்மை குறித்து பேசினார்.பண்ணைப் பள்ளியில், சோரப்பட்டு, விநாயகம்பட்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராம விரிவாக்கப் பணியாளர்கள் ஆதிநாராயணன், திருமுருகன், தங்கதுரை, பணியாளர் சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர். உதவி தொழில் நுட்ப மேலாளர் சிரஞ்சீவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X