பொது செய்தி

இந்தியா

தென்னை விவசாயிகளுக்கு செயல் விளக்க முகாம்

Added : ஜன 10, 2020
Advertisement
 தென்னை விவசாயிகளுக்கு செயல் விளக்க முகாம்

புதுச்சேரி:காலாப்பட்டு உழவர் உதவியகம் சார்பில், 'தென்னைக்கு நுண்ணுாட்டச்சத்து இடுதல்' குறித்து, விவசாயிகளுக்கான செயல்விளக்க முகாம், கனகசெட்டிக்குளத்தில் நடந்தது.
வேளாண் அலுவலர் சிவசுப்பரமணியன் தலைமை தாங்கி, தென்னை வளர்ப்பு, அதன் முக்கியத்துவம், நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆதித்தன், தென்னையில் நுாண்ணுாட்ட சத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதனை இடுதல் குறித்து விளக்கினார். விவசாயிகளுக்கு இரண்டு கிலோ நுண்ணுாட்டசத்து உரம் வழங்கப்பட்டது. முகாமில் காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை கிராம விரிவாக்க பணியாளர் பழனி, மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X