பொது செய்தி

இந்தியா

பொறுப்பாளர் இல்லாத அங்கன்வாடி மையம்

Added : ஜன 10, 2020
Share
Advertisement

நெட்டப்பாக்கம்:பண்டசோழநல்லுார் அங்கன்வாடி மையத்திற்கு பொறுப்பாளரை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் காலனி பகுதி மூன்றாவது தெருவில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.இந்த அங்கன்வாடி மையம் மூலம் மழலைகளுக்கு கல்வி போதிப்பதும், முதியோர் பென்ஷன், சுகாதார துறை மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான டோக்கன் வினியோகம், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கல் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வந்த பொறுப்பாளர் கடந்தாண்டு பணி ஓய்வு பெற்றார். ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை, புதிய பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை.இதனால், அங்கன்வாடி மையத்தின் உதவியாளரே மழலைகளுக்கு பாடம் கற்பிப்பது, சத்துணவு தயாரிப்பது, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றார்.எனவே, பண்டசோழநல்லுார் அங்கன்வாடி மையத்திற்கு விரைவில் பொறுப்பாளரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X