பொது செய்தி

தமிழ்நாடு

மாறிய அலங்காரம்: மருத்துவ கல்லூரியில் 'கலக்கல் பொங்கல்'

Added : ஜன 10, 2020
Advertisement
 மாறிய அலங்காரம்: மருத்துவ கல்லூரியில்  'கலக்கல் பொங்கல்'

சிவகங்கை:விதவிதமாக வண்ண சுடிதார் உடுத்தி காளையரை கவரும் கல்லுாரி கன்னிகளே வழக்கமாய் காண வந்தேன்... வழக்கத்திற்கு மாறாக மாறிப்போனதோ உன் அலங்காரங்கள்,'' என காளையர்கள் வியக்கும் விதத்தில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மாணவிகள் பாரம்பரிய சேலை, மாணவர்கள் வேட்டி சட்டையுடன் கிராமத்து பாணியில் கல்லுாரியில் கலக்கலாக பொங்கல்' கொண்டாடினர்.

மருத்துவ கல்லுாரி மாணவர்கள் என்றாலே பேன்ட் சர்ட், சுடிதாருடன் 'ஒயிட் கோட்' கழுத்தில் 'ஸ்டெதஸ்கோப்' போட்டு நோயாளிகளை பரிசோதித்து கல்வி பயில்வது தான் நம் நினைவில் வரும். ஆனால் பொங்கலை விழாவை முன்னிட்டு கல்லுாரியில் சற்று கலக்கலாக வேட்டி, சேலை அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து பால் பொங்கியதும் பொங்கலோ... பொங்கல்... என சந்தோஷ சாரலாக மாணவிகள் முழக்கமிட்டு, சூரிய பகவானுக்கு படையலிட்டனர்.தொடர்ந்து பசுவையும் அலங்கரித்து அதற்கும் பொங்கல் வழங்கி கொண்டாடினர்.


கிராமிய விளையாட்டுக்கள்:



பொழுதுபோக்கு அம்சமாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பானை உடைத்தல், கயிறு இழுத்தல், பேச்சு, பாட்டு போட்டி, இசை நாற்காலி உட்பட பல்வேறு போட்டிகளை நடத்தி, கல்லுாரியை கிராமத்து சாயலில் மாற்றி விட்டனர்.கல்லுாரி டீன் ரத்தினவேல் தலைமை வகித்தார். துணை முதல்வர் சர்மிளா திலகவதி, கண்காணிப்பாளர் ஷீலா, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள், உதவி அலுவலர் முகமது ரபி பங்கேற்றனர்.

மருத்துவ மாணவிகள் கருத்து:

தமிழுக்கு மரியாதை

எம்.ஜி., நாகமீனாட்சி: கல்லுாரியில் தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத வகையில் பொங்கல் வைத்து வழிபட்டது சந்தோஷம் அளிக்கிறது. என்ன தான் மருத்துவ மாணவர்களாக இருந்தாலும், தமிழுக்கும், பாரம்பரியத்திற்கும் தை பொங்கல் விழா மூலம் மரியாதை செய்வதாக எண்ணுகிறோம்.

கிராமத்தில் வசித்த மகிழ்வு

எம்.செர்லின் சினேகா: தமிழர்களின் பாரம்பரிய விழா என்பதால், பேச்சு, கட்டுரை போட்டிகள் அனைத்தும் முற்றிலும் தமிழை மையமாக வைத்து நடத்தினோம்.இதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியம், வரலாற்றை உணர்ந்தோம். இரண்டு நாட்கள் நடந்த பொங்கல் விழா மூலம் கல்லுாரியில் வசிக்கும் எண்ணத்தை மறந்து, கிராமத்தில் வசித்த மகிழ்வு ஏற்பட்டுள்ளது.


தமிழரின் உன்னத விழா பொங்கல்

ஏ.ஷபானா: இந்நிகழ்வு மூலம் பானை ஓவியம், கிராமிய நடனம், பேச்சு போட்டிகளில் பங்கேற்று மகிழ்ந்தோம். மருத்துவ கல்லுாரியில் படித்தாலும், தமிழ் மீதுள்ள பற்று, இந்த பொங்கல் விழாவில் நடந்த நடனம் உள்ளிட்டவை மூலம் அறிந்து கொண்டேன். அனைத்து மாநில மாணவ, மாணவிகளும் இணைந்து கொண்டாடிய உன்னத விழா பொங்கல். என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X