சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தில் விரிசல்ரயில்கள் தாமதம்

Added : ஜன 10, 2020
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரயில்கள் தாமதமாக சென்றன.
கல்லல் ஒன்றியம் பனங்குடி ரயில் நிலையம் அருகே நேற்று இயந்திரம் மூலம் தண்டவாள சீரமைப்பு பணி நடந்தது. மதியம் 2:00 மணிக்கு இயந்திரம் பழுது காரணமாக, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மதியம் 2:30 மணிக்கு அவ்வழியாக வந்த மானாமதுரை-மன்னார்குடி பயணிகள் ரயில் பனங்குடி ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது.

அதே போல் ராமேஸ்வரம்-திருச்சி ரயில் மாலை 5:00 மணிக்கு சிவகங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. காரைக்குடி மற்றும் சிவகங்கை நிலைய ஊழியர்கள் விரிசலை சரிசெய்தனர். இதை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு இரண்டு ரயில்களும் புறப்பட்டு சென்றது. தாமதம் காரணமாக இந்த ரயில்களில் வந்த பயணிகள் பலர் பேருந்துகளில் ஏறி ஊர்களுக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X