பொது செய்தி

இந்தியா

தாவரவியல், பாரதி பூங்காவுக்கு தண்ணீர் ரூ.1.29 கோடியில் குழாய் பதிக்கும் பணி

Added : ஜன 10, 2020
Share
Advertisement
 தாவரவியல், பாரதி பூங்காவுக்கு தண்ணீர் ரூ.1.29 கோடியில் குழாய் பதிக்கும் பணி

புதுச்சேரி:திப்புராயப்பேட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, தாவரவியல் பூங்கா, பாரதி பூங்காவுக்கு தண்ணீர் கொண்டுவர ரூ.1.29 கோடி மதிப்பில் குழாய் அமைக்கும் பணியை அன்பழகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட திப்புராயப்பேட்டை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், தாவரவியல் பூங்கா மற்றும் பாரதி பூங்காவில் செடி வளர்ப்பு பயன்பாட்டிற்கு கொண்டு செல்லும் வகையில், உந்து குழாய் அமைக்கும் பணிக்கான துவக்க விழா நேற்று நடந்தது.மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ் ரூ. 1.29 கோடி செலவில், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தாவரவியல் பூங்கா, பாரதி பூங்காவுக்கு செடி வளர்ப்பிற்கான தண்ணீரை சேகரிக்க, கிணறுகள், உந்து குழாய்கள் மற்றும் மோட்டார் பம்புகள் அமைக்கப்பட உள்ளது.இதற்கான பணிகளை அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் லுாசியன் பெட்ரோகுமார், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X