பொது செய்தி

இந்தியா

முருங்கப்பாக்கம் பஜனை மடத்தில் ஜன. 12 ல் ஆண்டாள் திருக்கல்யாணம்

Added : ஜன 10, 2020
Share
Advertisement

புதுச்சேரி:முருங்கப்பாக்கம் பஜனை மடத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை மறுநாள் நடக்கிறது.
முருங்கப்பாக்கத்தில் பழமைவாய்ந்த, சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் அமைந்துள்ளது. இங்கு மார்கழி மகோற்சவம் துவங்கி, நடந்து வருகிறது. மகோற்சவத்தின் முக்கிய உற்சவமான ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், கூடாரவல்லி உற்சவம் நாளை மறுநாள் (12ம் தேதி) நடக்கிறது.விழாவை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு, கண்ணன் - ஆண்டாள் உற்சவ மூர்த்திகளுக்கு கலசத் திருமஞ்சனம், 9:30 மணிக்கு, சந்துவெளி மாரியம்மன் கோவிலில் இருந்து பள்ளத் தெரு வழியாக பெண் அழைப்பு நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் சீர்வரிசை தட்டுகளுடன் கலந்து கொள்ளலாம்.காலை 10:30 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, திருக்கல்யாண கோலத்தில், சர்வ அலங்காரத்தில் சுவாமி - ஆண்டாள் வீதியுலா நடக்கிறது.முன்னதாக, நாளை (11ம் தேதி) மாலை 6:00 மணியளவில் மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னைமர வாகனத்தில் பஜனையுடன் சுவாமி திருவீதியுலா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, பஜனை மடத்தின் நிர்வாகிகள், முருங்கப்பாக்கம் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X