பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகளின் அவஸ்தையையும்

Added : ஜன 10, 2020
Share
Advertisement
பெருமதிப்புக்குரிய அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனருக்கு...கோவை கோமாளியின் பெருவணக்கமுங்க!கோவை கோட்டத்துக்கு நீங்க பொறுப்பேற்ற பிறகு, வருவாயை அதிகரிக்க ஏகப்பட்ட முயற்சிகளை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. ஒரு நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லணும்னா, எந்த அளவுக்கு வேலை பார்க்கணுமோ, அந்தளவுக்கு உத்வேகமா செயல்படுறீங்க.தீபாவளி சமயத்துல சிறப்பு பஸ் இயக்கி,

பெருமதிப்புக்குரிய அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனருக்கு...கோவை கோமாளியின் பெருவணக்கமுங்க!கோவை கோட்டத்துக்கு நீங்க பொறுப்பேற்ற பிறகு, வருவாயை அதிகரிக்க ஏகப்பட்ட முயற்சிகளை செஞ்சுக்கிட்டு இருக்கீங்க. ஒரு நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லணும்னா, எந்த அளவுக்கு வேலை பார்க்கணுமோ, அந்தளவுக்கு உத்வேகமா செயல்படுறீங்க.தீபாவளி சமயத்துல சிறப்பு பஸ் இயக்கி, ரூ.6.41 கோடி வசூலிச்சு, சாதனை புரிஞ்சீங்க. இந்த விஷயத்தை சுற்றறிக்கையா வெளியிட்டு, எல்லா டிரைவர், கண்டக்டர்களுக்கும் தெரியப்படுத்தி, வாழ்த்து தெரிவிச்சீங்க; இதெல்லாம் ரொம்பவும் பாராட்டுக்குரிய விஷயம்தான்!நீங்க வந்ததுக்கு அப்புறம், ரொம்பவுமே மெனக்கெட்டு, வருவாய் ஈட்டி, ஒன்னாந்தேதி சம்பளம் கெடைக்க ஏற்பாடு செய்றதா சொன்னாங்க. இதெல்லாம் பெருமைக்குரிய விஷயம்தாங்க!அதேநேரம், பஸ்களை ஒழுங்கா பராமரிக்க வேண்டாமா? எந்த பணிமனைக்கு போனாலும், 'ஸ்பேர் பார்ட்ஸ்' இல்லை; 'அட்ஜஸ்ட்' பண்ணி ஓட்டுங்கன்னு சொல்றதா டிரைவர்கள் புலம்புறது, ஒங்க காதுக்கு கேட்கலையா.கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கி.மீ., ஓட்டணும்னு டிரைவர்களை பாடாய்படுத்துறதா கேள்விப்பட்டேன். 8 மணி நேரத்துக்கு பதிலா, 12 மணி நேரம்; 16 மணி நேரம் பஸ் ஓட்டுனா, மன உளைச்சலுக்கு ஆளாக மாட்டாரா?அப்புறம், டீசல் சிக்கனம். ரோடெல்லாம் குண்டும் குழியுமா இருக்குது; பாலம் கட்டுறாங்க; பாதாள சாக்கடை குழாய் பதிக்க குழி தோண்டியிருக்காங்க; குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டியிருக்காங்க.போக்குவரத்து நெருக்கடி அதிகமாயிடுச்சு. இருந்தாலும், குறிப்பிட்ட நேரத்துக்குள்ள வந்தாகணும்னு சொல்லி, டார்ச்சர் செஞ்சா, வெறும் பஸ்சை தானே ஓட்டிட்டு வருவாங்க.இதுக்கு முன்னாடி, டிரைவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படாமல் இருக்க யோகா, மூச்சுப்பயிற்சி கொடுத்தாங்க. இப்ப, அத்தகைய பயிற்சி கொடுக்கறதில்லையே.இன்னொரு முக்கியமான விஷயம், பஸ்சில் பயணிக்கிற பயணிகள்தான், எஜமானர்கள் என்பதை நீங்க உணரணுமுங்க!அவுங்க கொடுக்குற டிக்கெட் கட்டணம்தானே, போக்குவரத்து கழகத்துக்கு வருமானம்; அதில் இருந்துதானே உங்களுக்கும், உங்களுக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், கண்டக்டர், டிரைவர்களுக்கும், இதர பணியாளர்களுக்கும் சம்பளமா கொடுக்குறாங்க.கோயமுத்துார்ல இருந்து திருப்பூர் போற பஸ்சுல, கருத்தம்பட்டி போறதுக்கு, 18 ரூபாய் கட்டணம்.ஈரோடு அல்லது சேலம் போற பஸ்சுல பயணிச்சா, 23 ரூபாய். இப்ப, புதுசா, செவப்பு கலர்ல ஓட்டுறீங்களே... டீலக்ஸ் சொகுசு பஸ்சுங்கிற பெயர்ல வாங்குற கட்டணம் ரூ.33. ஒரே துாரம்; ஆனா, மூணு விதமா கட்டணம்.இதெல்லாம் ஓவரா தெரியலை? ஆனா, பிரைவேட் பஸ்சுல, 18 ரூபாதாங்க வாங்குறாங்க. பிரைவேட் பஸ்சுல பயணிகள் போவாங்களா; அரசாங்க பஸ்சுல ஏறுவாங்களா...திருப்பூர் பஸ் வரட்டும்ணு, மணிக்கணக்குல ஸ்டாப்புல காத்துக்கிடக்காங்க. பிரைவேட் பஸ்சுல மக்கள் போறாங்க; கவர்மென்ட் பஸ் காலியா போகுது. இதே பிரச்னை, எல்லா 'ரூட்'டிலும் இருக்கு.இன்னொரு முக்கியமான பிரச்னை, முக்கியமான ரூட்டில் ஏகப்பட்ட பஸ் சர்வீசை நிறுத்திட்டீங்களே... ஏங்க?பேரூர் - பாலிடெக்னிக், சிவானந்தா காலனி - சிவானந்தா காலனி, காந்திபார்க் - காந்திபார்க், கணபதி - மதுக்கரை, கணபதி - கோவைப்புதுார், வடவள்ளி - ஒண்டிபுதுார் வழித்தடத்துல ஏகப்பட்ட பஸ் ஓடிட்டு இருந்துச்சு.இப்ப ஒன்றிரண்டு பஸ்சுதாங்க ஓடுது. பஸ் சர்வீசையே நிறுத்திட்டீங்கன்னா, பயணிகள் எதுலங்க போவாங்க.இதுக்கு முன்னாடி, மகளிருக்காக மட்டும் சிறப்பு பஸ் இயக்கிட்டு இருந்தாங்க. இப்ப, ஒரே ஒரு பஸ் மட்டும் ஓடுது. மத்த ரூட்டுல காணமேங்க. பஸ்சுல பயணிக்கிறவங்கள்ல பெரும்பாலானவங்க லேடீஸ்தாங்க. அவுங்களுக்கு சவுகரியம் செஞ்சு கொடுக்க வேண்டாமா?'லேட்' ஆகிடுச்சுன்னு, 'ரூட்'டுல பாதியை, 'கட்' அடிச்சிட்டு திரும்பி போயிடுறாங்க. ஸ்டாப்புல ஒருத்தரோ, இரண்டு பேரோ நின்னுக்கிட்டு இருந்தா, நிறுத்துறதில்லை.பஸ் பாஸ் வச்சிருக்கிற பள்ளி மாணவ, மாணவியரை பார்த்தா, உடனே பஸ்சை நிறுத்தி ஏத்திட்டு போகணும்னு, ஏன் நினைக்க மாட்டேங்கிறாங்க.ஸ்டாப்பை விட்டு தள்ளி நிறுத்துறீங்க; புத்தக பையை சுமந்துட்டு, அவுங்கள ஓடி வந்து, ஏற வைக்கிறாங்களே. இதையெல்லாம் கண்டுக்காம இருக்குறீங்களே...இருந்தாலும், இன்னமும் 'டஞ்சன்' பஸ்சும் ஓடிட்டு தானே இருக்கு. சீட்டுல ஒக்காரவே முடியறதில்லை. அப்புறம், எந்த பஸ்சும் சுத்தமா இருக்கறதில்லை; சமீபகாலமா புது பிரச்னை கிளம்பியிருக்கு. எம்.எல்.ஏ., சொன்னாரு; எம்.பி., சொன்னாரு, அமைச்சர் சொன்னாருன்னு, முக்கியமான 'ரூட்'டுல போற பஸ்களை, வேற 'ரூட்'டுக்கு திருப்பி விடுறீங்க; அந்த 'ரூட்'டுல வழக்கமா போற, 'பிரைவேட்' பஸ்சுக்குதானே, லாபம்; இதை ஏன், இன்னும் உணராம இருக்கீங்க.நுாத்துக்கணக்கான பயணிகள் காத்திருக்கிற முக்கியமான ஏரியாவுக்கு பஸ் இயக்காம, ஆளே இல்லாத கிராமத்துக்கு ஓட்டுனா, கழகத்துக்கு நஷ்டம் தானே ஏற்படும்.வரப்போற பொங்கல் திருவிழாவுக்காக, அடுத்த வாரம், கொடிசியா மைதானத்துல இருந்து, ஸ்பெஷல் பஸ் இயக்கப் போறதா அறிவிச்சிருக்கீங்க. நல்ல விஷயம்.பயணிகளுக்கு தண்ணீர், கழிப்பறை, ஓய்வெடுக்கறதுக்கு இட வசதி செஞ்சு கொடுங்க.ஏகப்பட்ட பிரச்னை இருந்தாலும், எல்லாத்தையும் சமாளிச்சு, பயணிகளுக்கு தேவையான வசதி செஞ்சு கொடுத்து, 2020 முடியறதுக்குள்ள, நம்ம கோட்டத்தை லாபத்துல இயக்குவீங்கன்னு, ஒங்க மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்குங்க!இப்படிக்கு,கோவை கோமாளி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X