பொது செய்தி

இந்தியா

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொழில்நுட்பம் அன்னை தெரேசா கல்லுாரியில் கருத்தரங்கம்

Added : ஜன 10, 2020
Advertisement
 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொழில்நுட்பம் அன்னை தெரேசா கல்லுாரியில் கருத்தரங்கம்

புதுச்சேரி:சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
அன்னை தெரேசா பட்டமேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிசியோதெரபி கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லுாரி டீன் ஜெயந்தி தலைமை தாங்கினார்.முதன்மை விருந்தினராக, பல்வகை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் பிசியோதெரபி துறைத் தலைவர் டாக்டர் சந்தோஷ் கண்ணா, சிறப்பு விருந்தினராக உதவி தொழில்நுட்ப நிபுணரும் ஆலோசகருமான சங்கர் சுப்பையா ஆகியோர் பங்கேற்று, பேசினர்.
எலும்பு சிகிச்சை நிபுணர் பிரகாஷ் சாகு, ஐ.சி.டி., பயிற்றுவிப்பாளர் தட்சணாமூர்த்தி, சீனியர் தெரபிஸ்ட் வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக, பிசியோதெரபி கல்லுாரி முதல்வர் சுப்ரியா வினோத் வரவேற்றார். உதவி பேராசிரியர் அழகுமூர்த்தி நன்றி கூறினார். கருத்தரங்கில் பிசியோதெரபி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X