தமிழ்நாடு

கட்டட உரிமையாளர்களே எச்சரிக்கையா இருங்க! வாடகைக்கு விடும்முன் கவனம்!

Updated : ஜன 10, 2020 | Added : ஜன 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 கட்டட உரிமையாளர்களே எச்சரிக்கையா இருங்க! வாடகைக்கு விடும்முன் கவனம்!

கோவை:'என்ன பொருள் இருப்பு வைக்கப்படுகிறது, விற்பனை செய்யப்படுகிறது என்பதை அறிந்த பிறகே, குடோன், கடையை வாடகைக்கு விட வேண்டும். விதிமீறல் இருந்தால், வழக்கு முடியும் வரை, கட்டடம் 'சீல்' வைக்கப்படும்' என்று, அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகரில், வெவ்வேறு இடங்களில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவுபடி, உணவு பாதுகாப்புத்துறையினரும், தனிப்படை போலீசாரும், நேற்று இரு வேறு இடங்களில் 'ரெய்டு' நடத்தினர்.ரூ.7 லட்சம் புகையிலை பொருள்டவுன் ஹால் பகுதியில் ராஜவீதி, இடையர் வீதியில் அலுவலர்கள் குழுவினர் நடத்திய ரெய்டில், 230 கிலோ, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மதிப்பு, 7 லட்சம் ரூபாய்.ராஜவீதி என்.எம்.ஆர்., கட்டடத்தில், புகையிலை பொருட்கள், 117 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. பேராராம், 28, நாகராம், 30, ஆகிய இருவரும், தாங்கள் நடத்தி வந்த சங்கர் பேன்சி ஸ்டோர் என்ற கடையில், இவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.இடையர் வீதியில், சலவையர் லேன் பகுதியில் உள்ள குடோனில் நடத்திய சோதனையில், 103 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரமேஷ், ஹரீஷ் ஆகியோர் பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பகுப்பாய்வு அறிக்கை அடிப்படையில், குற்றப்பத்திரிகை தயார் செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது:இந்த இரண்டு குடோன்களும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன், சீல் வைக்கப்படுகிறது.

கட்டட உரிமையாளர்கள், தாங்கள் என்ன நோக்கத்துக்காக, யாருக்கு வாடகைக்கு விடுகிறோம், அதில் சட்ட விதிமீறல் உள்ளதா என்று பார்த்து, வாடகைக்கு விட வேண்டும்.அதிக லாபம் அடையலாம் என்ற எண்ணத்தில், கலப்பட டீத்துாள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்களுக்கு வாடகைக்கு விட்டால், சம்பந்தப்பட்ட வழக்கு முடியும் வரை, அவர்களது கட்டடத்தை வாடகைக்கு விடவோ, தங்களது உபயோகத்திற்கு எடுத்து கொள்ளவோ முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.


ரூ.1.62 லட்சம் அபராதம்!


கோவை மாவட்டத்தில், உணவுப் பாதுகாப்புத்துறை 32 கடைகளில் நேற்று முன் தினம் நடத்திய நடத்திய அதிரடி ரெய்டில், தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்றதாக,, 1.62 லட்சம் ரூபாய், 'ஸ்பாட் பைன்' விதிக்கப்பட்டது. சூலுார் பகுதியில் அனுமதியற்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு உணவு பொருட்களை பொட்டலம் கட்டிய வணிகருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
10-ஜன-202007:56:52 IST Report Abuse
RADE ஏன் அரசு தயாரிப்பு நிறுவனதின் மீது வழக்கு பதிவு செய்து இதற்கு நிரந்திர தீர்வு காண முயற்சிப்பது இல்லை, பிற மாநிலத்தில் இருந்து தருவித்தாலும் வழக்கு பதிவு செய்து அந்த மாநிலத்தின் காவல் துறைக்கு ஒரு நகல் அனுப்பி நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி இல்லை என்றால் மத்திய அரசை நாட முயற்சிக்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X