பொது செய்தி

இந்தியா

பள்ளி அருகில் வேகத்தடை தேவை

Added : ஜன 10, 2020
Advertisement

நெட்டப்பாக்கம்:நெட்டப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி அருகில், வேகத்தடையை அகற்றியதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து எதிரில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி அருகாமையில் பஸ்கள் செல்லும் சாலையில், மாணவர்களின் நலன் கருதி வேகத்தடை அமைக்கப்பட்டது. இதனால், இந்த இடத்தில் வாகனங்கள் சீரான வேகத்தில் சென்றன.இந்த வேகத்தடையை, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அகற்றிவிட்டனர்.
அந்த இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்காததால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, பள்ளி அருகில் அகற்றப்பட்ட வேகத்தடையை மீண்டும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X