பொது செய்தி

இந்தியா

ஜவகர் பால்பவனில் கலைத்திறன் போட்டிகள்

Added : ஜன 10, 2020
Advertisement
 ஜவகர் பால்பவனில் கலைத்திறன் போட்டிகள்

புதுச்சேரி:பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிகொண்டுவரும் வகையில், இரு நாட்கள் நடைபெறும், 'வானவில்' போட்டிகள் ஜவகர் பால்பவனில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை, சமக்கர சிக் ஷா திட்டத்தின் கீழ், வானவில் என்ற 'ரங்க உத்சவ்' நிகழ்ச்சி, ஜவகர் சிறுவர் இல்லத்தில் நேற்று துவங்கியது. அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வகையில் இப் போட்டி நடத்தப்படுகிறது.போட்டிக்கான நோடல் அதிகாரி பாஸ்கரராசு தலைமை தாங்கினார். சமக்கர சிக் ஷா மாநில திட்ட இயக்குநர் தினகர், போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில், வாய்ப்பாட்டு, ஓவியம், பாரம்பரிய உடையுடன் மாறுவேடம், இசைக்கருவி மீட்டல், நாடகம், நடனம், நாட்டுப்புற குழு நடனம் ஆகிய போட்டிகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியில், அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான போட்டி நேற்று நடந்தது.இன்று, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும், பயிற்சி ஆசிரியர்களுக்கும் போட்டி நடக்கிறது.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி, காந்தி திடலில் நடக்கும் விழாவில், முதல்வர் நாராயணசாமி பரிசு வழங்குகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X