பொது செய்தி

தமிழ்நாடு

அமெரிக்கா செல்லும் பள்ளி மாணவர்கள் யார்? எதிர்பார்ப்பை கிளப்பும் தினமலர் வினாடி வினா!

Added : ஜன 10, 2020
Advertisement
 அமெரிக்கா செல்லும் பள்ளி மாணவர்கள் யார்? எதிர்பார்ப்பை கிளப்பும் தினமலர் வினாடி வினா!

கோவை:'தினமலர்' வினாடி வினா போட்டியானது, கோவை பள்ளிகளில் மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் கிளப்பி வருகிறது.தினமலர் நாளிதழ், கோவை அமிர்தாவிஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், இந்த மெகா வினாடி வினா போட்டியானது, நேற்று செல்வபுரம் சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 1000 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'எப்' அணியைச் சேர்ந்த தருண், நிஷாந்த் ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் அனுராதா துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.நிகழ்ச்சியினை, பள்ளியின் ஆசிரியர்கள் வனஜா, மாசிலாமணி, தேவிகலா, மகேஸ்வரி, சிவக்குமார், ஜெயந்தி, ரேணுகாதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பள்ளிபெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில், 400 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான போட்டியில், 'பி' அணியைச் சேர்ந்த ருத்ரசாரதி, மித்ரஜித் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு, பள்ளியின் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தா மற்றும் முதல்வர் பரமசிவம் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியை ஆசிரியர்கள் மகேந்திரன், மருது, கோவிந்தராஜ், சத்திய நாராயணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.நிர்மல மாதா பள்ளிவெள்ளலுார் நிர்மல மாதா கான்வென்ட் பள்ளியில் நடந்த போட்டியில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியாக, 'இ' அணியைச் சேர்ந்த நிவேதிதா, ஸ்ரீஹர்ஷா வெற்றி பெற்றனர். அவர்களுக்கு, பள்ளியின் முதல்வர் லின்ஸா பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியைகள் கவுதமி, சாந்தாமணி, ஜெயந்தி, லாவண்யா, புவனேஸ்வரி, விஜயலட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில், 500 மாணவர்கள் பங்கேற்றனர். 'பி' அணியைச் சேர்ந்த பிரவீன், பிரனேஷ் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு, பள்ளியின் முதல்வர் ரவி பரிசுகளை வழங்கினார். ஆசிரியைகள் சத்யா, அமுதா, மகேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X