பொது செய்தி

இந்தியா

தலைமை செயலர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் மீது உரிமை மீறல் புகார்

Added : ஜன 10, 2020
Advertisement
 தலைமை செயலர் உள்ளிட்ட 4 அதிகாரிகள் மீது உரிமை மீறல் புகார்

புதுச்சேரி:சட்டசபையின் முடிவு மற்றும் மாண்புகளை மீறியதாக, புதுச்சேரி தலைமைச்செயலர் உள்ளிட்ட நான்கு உயரதிகாரிகள் மீது, காங்., எம்.எல்.ஏ, ஜெயமூர்த்தி, சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளார்.
புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையர் பதவியை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூலை மாதம் கவர்னர் கிரண்பேடி உத்தரவுப்படி, உள்ளாட்சித் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.தங்கள் கவனத்திற்கு கொண்டுவராமல் வெளியான அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியாளர்கள், சட்டசபையை கூட்டி, அந்த அறிவிப்பை ரத்த செய்தனர்; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணனை, மாநில தேர்தல் ஆணையராக நியமித்தனர்.இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி மத்திய அரசிடம் புகார் தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சகம், தலைமைச்செயலர் தலைமையில் குழு அமைத்து, மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்யுமாறு, தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியது. அதனடிப்படையில், மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க, கடந்த 7ம் தேதி., உள்ளாட்சித் துறை சார்பில் புதிய விளம்பரம் வெளியிடப்பட்டது.
இதன்மூலம், சட்டசபை முடிவு மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, தலைமை செயலர், உள்ளாட்சித் துறை செயலர், இயக்குனர், சார்பு செயலர் ஆகியோர் மீது, காங்., எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி, சபாநாயகர் சிவகொழுந்துவிடம், நேற்று உரிமை மீறல் புகார் அளித்தார்..அந்த மனுவில், ' புதுச்சேரி உள்ளாட்சித் துறை அரசாணையின்படியும், புதுச்சேரி மாநில அரசிதழில் வெளியிட்டபடியும், பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.உள்ளாட்சி அமைப்புகள் மாநில தேர்தல் ஆணையரை நியமனம் செய்வதற்கு நியமன விதிகள் ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டசபையின் முடிவை அரசு அதிகாரிகள் மீறியுள்ளனர்.
மாநில தேர்தல் ஆணையர் தற்போது பணியில் இருக்கும் நிலையில், அமைச்சரவை, அமைச்சர் மற்றும் அரசுக்கு தெரியாமல், மாநில தேர்தல் ஆணையரின் தகுதிகளை, தலைமை செயலர் தன்னிச்சையாக திருத்தி, விண்ணப்பம் கோருவது, விதிமுறைகளை மீறிய செயல். சட்டசபையை அவமதிப்பதுடன், உரிமையையும் மீறியதாகும்.எனவே, சட்டசபை மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில், உரிமை மீறல் செய்த தலைமைச் செயலர், உள்ளாட்சித்துறை செயலர், இயக்குனர், சார்பு செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X