பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியன் வங்கியில் கடன் வழங்க சிறப்பு சலுகை!

Added : ஜன 10, 2020
Advertisement

இந்தியன் வங்கி சார்பில், விழாக்காலம் முன்னிட்டு, வீடு வாங்க, கட்ட மற்றும் கார் வாங்க, உடனடி கடன் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.இதுகுறித்து இந்தியன் வங்கி வெரைட்டிஹால் ரோடு கிளை மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:இந்தியன் வங்கியில் விழாக்கால சிறப்பு சலுகையாக, வாடிக்கையாளர்கள் கடன் பெற, உடனடி ஒப்புதல் வழங்கப்படுகிறது; பரிசீலனை கட்டணம் இல்லை. வீட்டுக்கடன் சிறப்பு சலுகையாக, 8.05 சதவீதம் முதல், குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
ஒரு லட்சம் ரூபாய்க்கு, மாதம் ரூ.748 என்ற மிகக்குறைந்த மாதத்தவணையில், வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்தலாம். மாத சம்பளம் பெறுவோர் மற்றும் பெண்களுக்கு, சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.2.67 லட்சம் வரை மானியம் பெறலாம்.கார் கடன், 8.85 சதவீதம் முதல் குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தில், வழங்கப்படுகிறது. இதை ஒரு லட்சம் ரூபாய்க்கு, மாதம் ரூ.1,601 என்ற குறைந்த மாதத்தவணையில், 7 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X