பொது செய்தி

தமிழ்நாடு

'வைப்ரன்ட் கொங்குநாடு' கண்காட்சி 'லோகோ' அறிமுகம்

Added : ஜன 10, 2020
Advertisement

கோவை:கோவையில் அக்.,16 முதல் 18ம் தேதி வரை நடக்கவுள்ள, 'வைப்ரன்ட் கொங்குநாடு' கோயம்புத்துார் குளோபல் கண்காட்சி மற்றும் மாநாட்டுக்கான, 'லோகோ' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குளோபல் நெட்வொர்க் எனும் சர்வதேச வணிக ஆலோசனை நிறுவனமும் இணைந்து, கோவையில் நடத்தும் இந்நிகழ்ச்சியில், இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள் பலர் பங்கேற்கின்றனர். பன்னோக்கு துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து இதில் தெரிவிக்கப்படும்.குளோபல் நெட்வொர்க் நிறுவனர் ஜெகத் ஷா கூறுகையில், ''புதுமையான கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை, தொழில்கள், வணிகம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து, புதிய இணைப்பு உருவாக்கி பகிர்வதே, வைப்ரன்ட் கொங்குநாட்டின் நோக்கம். வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்நிகழ்ச்சி உதவும். 25 நாடுகளை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும்.ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், வேளாண் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் உட்பட பல்வேறு துறைகள் பங்கேற்கின்றன. விபரங்களுக்கு,www.vibrantkongunadu.com. நிகழ்ச்சி லோகோவை குளோபல் நெட்வொர்க் நிறுவனர் ஜெகத் ஷா அறிமுகம் செய்ய, கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் லாரன்ஸ், குகன், அபுதாகிர், முகமது நாசர், சந்தோஷ் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X