பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை டூ உரம்; கமிஷனர் ஆய்வு

Added : ஜன 10, 2020
Advertisement

கோவை:கோவையில், மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதை, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் நேற்று ஆய்வு செய்தார்.கோவை நகர் பகுதியில், மக்கும் குப்பையை தனியாக சேகரித்து, இயற்கை உரம் தயாரிக்க, ஒவ்வொரு பகுதியாக சிறிய அளவில் மையம் அமைக்கப்படுகிறது. கவுண்டம்பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்படும் மக்கும் குப்பையை உரமாக்க மையம் கட்டப்பட்டுள்ளது. இதில், 5 டன் குப்பையை உரமாக்கலாம்.துடியலுார் வாரச்சந்தை வளாகத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. மூன்றாவது வார்டு, வளர்மதி நகர், துடியலுாரிலும், 79வது வார்டு சுப்ரமணியபுரம் ஏ.எஸ்., திட்டச்சாலையிலும் கட்டுமான பணி முடிந்து விட்டது.மேற்கு மண்டலம், 24வது வார்டு, வாழைக்காய் மண்டி வளாகம் மற்றும் ஆரோக்கியசாமி ரோட்டில் கட்டுமான பணி நடந்து வருவதை, கமிஷனர் ஷ்ரவன்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.கவுண்டம்பாளையம் கிடங்கில் தற்போது, 3 டன் மக்கும் குப்பை உரமாக்கப்படுவதாக, அலுவலர்கள் தெரிவித்தனர். அதிகமான குப்பையை உரமாக்க, கமிஷனர் அறிவுரை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X