குடியுரிமை சட்டத்தை விளக்கி பா.ஜ., நிகழ்ச்சி

Added : ஜன 10, 2020
Advertisement
 குடியுரிமை சட்டத்தை விளக்கி பா.ஜ., நிகழ்ச்சி

புதுச்சேரி:'குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., மற்றும் இடதுசாரிகள் போராட்டத்தை தூண்டிவிட்டு, அரசியல் செய்கின்றன' என, மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் சி அங்காடி குற்றம் சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்தம் சட்டம் குறித்து, பொது மக்களுக்கு விளக்கும் நிகழ்ச்சி, பா.ஜ., சார்பில், லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் நேற்று நடந்தது.பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தங்க விக்கிரமன், ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் செல்வகணபதி, சங்கர் முன்னிலை வகித்தனர்.மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் சி அங்காடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கினார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, குறிஞ்சி நகரில், மக்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ணக் கோலமிட்டு, மத்திய அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.அப்போது, தனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற ஒரு பெண்ணின் காலில், மத்திய அமைச்சர் சுரேஷ் சி அங்காடி திடீரென விழுந்து வணங்கினார்.நிகழ்ச்சியில், மாநில செயலாளர் அருள்முருகன், துணைத் தலைவர்கள் முதலியார்பேட்டை செல்வம், ஏம்பலம் செல்வம், மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், தொகுதி தலைவர் சோமசுந்தரம், மாநில செயலாளர்கள் ஜெயந்தி, நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.'போராட்டத்தை துாண்டுகின்றனர்'மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் சி அங்காடி நிருபர்களிடம் கூறியதாவது;குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., மற்றும் இடதுசாரி கட்சிகள் போராட்டங்களை துாண்டி, அரசியல் செய்கின்றனர். இந்திரா பிரதமராக இருந்தபோதே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.நமது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். நான் பல இடங்களில், முஸ்லிம்களை சந்தித்து பேசினேன். அவர்கள் இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.குடியுரிமை சட்டம், மத்திய அரசு தொடர்பானது. அதில், மாநில அரசுகளுக்கு பங்கு எதுவும் கிடையாது. மாநில அரசு, எம்.பி.களுக்கு சந்தேகம் இருந்தால், பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம். மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடவில்லை. சிலர் மாணவர்களை துாண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X