குழந்தைகளை அச்சுறுத்தும் அங்கன்வாடி: அவதியில் அருந்ததியர் நகர் மக்கள்

Added : ஜன 10, 2020
Advertisement
 குழந்தைகளை அச்சுறுத்தும் அங்கன்வாடி: அவதியில் அருந்ததியர்  நகர் மக்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பாலையம்பட்டி அருந்ததியர் நகரில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டடம், தெருக்களில் கழிவு நீர் தேக்கம் என இப்பகுதி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.

இந்நகர் உருவாகி ஆண்டுகள் பல கடந்தும் தெருக்களில் ரோடு வசதி இல்லை. அனைத்து தெருக்களிலும் கற்கள் பெயர்ந்து காலை பதம் பார்க்கும் அளவிற்கு ரோடு உள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்றால் டயர்கள் 'பஞ்சர்' ஆகி விடுகிறது. தெருக்களில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ரோட்டில் தேங்கி சுகாதார கேடாக உள்ளது.

முத்தரையர் தெருவில் வாறுகால், ரோடு வசதி இல்லாததால் கழிவு நீர் தேங்கி நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. கழிவு நீரில் கொசுக்கள் உருவாகி இதன் தொல்லை தாங்க முடியவில்லை .இங்குள்ள அங்கன்வாடி மைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மைய படிக்கட்டுகள் சேதமடைந்து குழந்தைகள் ஏறி செல்ல சிரமப்படுகின்றனர். இங்குள்ள நவீன பெண்கள் சுகாதார வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இங்குள்ளவர்களுக்கான மயானத்தின் தகனமேடை மேற்கூரை இன்றி திறந்தவெளியாக உள்ளது.

எங்கள் பகுதி தெருக்கள் ரோடு இல்லாமல் ஆண்டு கணக்கில் உள்ளது. தெருக்களில் கற்கள் பெயர்ந்து நடக்க முடியாமல் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. பலமுறை ரோடு அமைக்க கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

-- அன்னலட்சுமி, குடும்பதலைவி.

எங்கள் பகுதி சுகாதார வளாகத்தை தண்ணீர் இன்றி பயன்படுத்த முடியாமல் உள்ளது. புதியதாக போர்வெல் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஆண்களுக்கு என தனி சுகாதார வளாகம் ஏற்படுத்த வேண்டும். புதிய ஊராட்சி நிர்வாகம் இதில் அக்கறை கொள்ள வேண்டும்.

- மஞ்சு, குடும்ப தலைவி .

அங்கன்வாடி மைய கட்டடம் இடியும் நிலையில் உள்ளது. உள்ளே செல்லும் படிக்கட்டுகள் சேதமடைந்து குழந்தைகள் ஏறி செல்ல சிரமப்படுகின்றனர். மேற்கூரை சேதத்தால் கட்டத்தில் இருக்கும் மின் மீட்டர் பெட்டியில் மழை நீர் ஒழுகியதால் மின் இணைப்பும் துண்டிக்கபட்டு உள்ளது. இதனால் பேன் வசதி இல்லாமல் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.-

சந்திவீரன், தனியார் ஊழியர் .

மயான தகன மேடையில் மேற்கூரை எதுவும் இல்லை. தரையில் வைத்து தான் உடல்களை எரிக்கிறோம். தேவையான வசதிகளை மயானத்தில் செய்து தர புதிய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கணேசன், தனியார் ஊழியர் .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X