பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் அறிவிப்பு வரல; பிரசாரம் துவங்கியாச்சு

Added : ஜன 10, 2020
Advertisement

அருப்புக்கோட்டை:உள்ளாட்சி ஊரக தேர்தல் முடிவால் அருப்புக்கோட்டை நகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட முக்கிய கடசியினர் விருப்ப மனு கொடுக்க துவங்கி விட்டனர். இதோடு முக்கிய பிரமுகர் ஒருவர் சமூகவலைதளம் மூலம் பிரசாரத்தையும் துவக்கி விட்டார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது பதவிகளுக்கு போட்டியிட கட்சியினர் போதிய ஆர்வம் காட்டவில்லை. தேர்தலில் நின்றால் செலவழிக்க வேண்டுமே என்ற யோசனையில் இருந்தனர். கடைசி கட்டத்தில் கட்சியினரை தேடி பிடித்து ஒவ்வொரு வார்டிற்கும் ஆட்களை நிறுத்த கட்சி நிர்வாகிகள் சிரமப்பட்டனர். தேர்தல் முடிந்து தி.மு.க., -அதி.மு.க., கட்சிகள் சம அளவில் வெற்றி பெற்றன.

தேர்தல் முடிவால் தற்போது தி.மு.க., வினர் உற்சாகத்தில் உள்ளனர். பொங்கல்முடிந்து நகராட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் நிலையில் அருப்புக்கோட்டையில் ஒவ்வொரு வார்டிலும் போட்டியிட பலரும் விருப்ப மனு மனு அளித்துள்ளனர். தி.மு.க., வில் புதியதாக சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் நகராட்சியில் உள்ள ஒரு வார்டில் தனது மனைவிக்கு 'சீட்' கிடைத்து விட்டதாக, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

தேர்தல் தேதி அறிவிக்காதநிலையில் இவரது பிரசாரம் மற்றும் வாக்குறுதிகளை சமூக வலைதளங்களில் பார்க்கும் தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.அ.தி.மு.க.,விலோ ஒன்றிய பகுதியில் தோல்வி அடைந்ததை அடுத்து நகராட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கவனமாக வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆலோசனை செய்து வருகின்றனர். வார்டுகளில் போட்டியிட கட்சியினர் பலரும் விருப்ப மனு கொடுத்து வருகின்றனர். இதோடு நகராட்சியை கைபற்ற பல வியூகங்களையும் வகுத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X