அரசு பஸ்சில் 'டிஸ்பிளே' இப்படியும் ஒரு சிக்கல்

Added : ஜன 10, 2020
Advertisement

திருப்பூர்:அரசு பஸ்களில், பஸ் பயணிக்கும் வழி, செல்லும் ஊர் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள 'டிஜிட்டல் டிஸ்பிளே' பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஸ்சுக்கும் 'பென்டிரைவ்' கொடுக்கப்பட்டுள்ளது. என்ன வார்த்தைகளை டைப் செய்கிறோமோ அதற்கேற்ப 'டிஸ்பிளே' ஒளிபரப்பாகிறது.தமிழ் வார்த்தை எளிதில் 'டிஸ்பிளே' வில் வருகிறது. ஆங்கில வார்த்தை 'டைப்' செய்தால், மாறுதல் ஏற்பட்டு விடுவதாக நடத்துனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.உதாரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்கள், புறவழிச்சாலை இயக்கம் என்ற வார்த்தையை குறிப்பிட வேண்டும். இதைப் பயணிகள் புரிந்துகொள்வதில்லை என்பதால், 'பைபாஸ்' என டைப் செய்கின்றனர். ஆனால், ஆங்கில வார்த்தை என்பதால் 'டிஜிட்டல் டிஸ்பிளே' ஏற்றுக்கொள்வதில்லை. வேறு மொழிகள் போன்று வடிவமைப்பு மாற்றம் ஏற்பட்டு 'டிஸ்பிளே'யாகிறது. பயணிகளுக்கு புரிவதில்லை என நடத்துனர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'முடிந்தவரை தமிழில் ஊர் பெயர்களை பதிவிடும்படி தொழில்நுட்ப அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் புரிந்து கொள்ள ஏதுவாக ஆங்கில வார்த்தை குறிப்பிடப்படுகிறது. தவிர்க்க முடியாத நேரத்தில், தவறுகள் நேர்ந்து விடுகிறது. இனி, மாற்று வார்த்தை குறிப்பிடப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X