பொது செய்தி

தமிழ்நாடு

மெகா 'சைஸ்' கத்தரிக்காய் கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனை

Added : ஜன 10, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில், 'மெகாசைஸ்' கத்தரி விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிலோ கத்தரி, 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.திருப்பூர் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தைக்கு, வழக்கமாக பவானி வரி கத்தரியில் சின்ன ரக கத்தரி மட்டுமே விற்பனைக்கு வரும். நேற்று, மெகா சைஸ் கத்தரி அதிகளவில் விற்பனைக்கு வந்தது.அளவில் பெரியதாக இருந்த இவை கிலோ, 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சின்ன ரக வரி கத்தரி கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், மெகா சைஸ் கிலோவுக்கு, 25 குறைந்து, 25 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.உழவர் சந்தை அலுவலர்கள் கூறியதாவது:கத்தரி பயிரிட்ட அனைத்து தோட்டங்களில் இது போன்ற ரகங்கள் விளையாது. வழக்கமாக, 40 முதல், 150 செ.மீ., உயரம் வளரும் கத்தரி செடி கோழி எச்சங்களை உரமாக பயன்படுத்தும் போது, எளிதில் உயரமாகி விடுகிறது. மகசூல் 120 நாளில் என்ற கணக்கீடு இருந்தாலும், 80 முதல், 90 நாட்களுக்குள் பூ பூத்து, காய்ப்பு பருவம் வந்து விடுகிறது.ஒரு செடியில் நிறைய காய்கள் முளைப்பதுடன், இருப்பு வைத்து விற்கின்றனர். ஒரு கத்தரிக்காய், 250 முதல், 350 கிராம் எடை கொண்டது. ஒரு கிலோ, 25 ரூபாய் என்பதால் சந்தையில் வரவேற்பு கிடைத்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X