பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் பாவை விழா மாணவர்கள் பங்கேற்பு

Added : ஜன 10, 2020
Advertisement

திருப்பூர்:இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஆண்டுதோறும் பாவை விழா கொண்டாடப்படுகிறது.அரசு பள்ளி குழந்தைகளுக்கு, திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.அவ்வகையில், நேற்று திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், பாவை விழாவில், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை, ராகத்துடன் பாடி ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒன்று முதல், 5ம் வகுப்பு; 6 முதல், 8 ம் வகுப்பு; 9 முதல், 12ம் வகுப்பு என, மூன்று பிரிவுகளாக போட்டி நடந்தது.இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 11 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.ஆசிரியர்கள் நடுவராக இருந்து, போட்டிகளை நடத்தினர். மாலையில் நடந்த விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.முதல் பரிசாக, 3,000 ரூபாய், இரண்டாம் பரிசாக, 2,000; மூன்றாம் பரிசாக, 1000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.வெற்றியாளர்கள், 36 பேருக்கு ரொக்கபரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X