பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மாணவர்கள்வெள்ளி விழா சந்திப்பு: ஆசிரியர்களிடம் நெகிழ்ச்சி

Added : ஜன 10, 2020
Share
Advertisement
 முன்னாள் மாணவர்கள்வெள்ளி விழா சந்திப்பு: ஆசிரியர்களிடம் நெகிழ்ச்சி

பல்லடம்:பல்லடத்தை அடுத்த கேத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1993-94ம் ஆண்டு படித்த, 34 மாணவ, மாணவியர், 25 ஆண்டுக்கு பின், பல்லடத்தில் சந்தித்தனர்.பல்லடத்திலுள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில், மாணவர்கள் தங்களின் குடும்ப வாழ்க்கை, தொழில் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினர். கோவை, கோபி, திருச்செங்கோடு, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் முன்னாள் மாணவர்களில் பலர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ளனர். வாட்ஸ்அப் மூலம், முன்னாள் மாணவர் ஹரிகோபால், மாணவர்களை ஒருங்கிணைத்தார்.முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:இன்றுள்ள தொழில்நுட்ப வசதியால், பள்ளி தோழர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு, 25 ஆண்டுகளுக்கு பின் கிடைத்தது. ஆண்டுதோறும் இச்சந்திப்பு தொடரும். வெள்ளி விழா ஆண்டில், முதல் முறையாக சந்திப்பதால், சுய அறிமுகம், குடும்பம், தொழில் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினோம்.ஒவ்வொரு மாணவ மாணவியர், எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களின் வீடு தேடி குடும்பத்துடன் சென்று, பழைய நட்பை புதுப்பிக்க உள்ளோம். மேலும், ஆசிரியர்களுக்கும், நாங்கள் கற்ற பள்ளிக்கும் எங்களாலான உதவிகளையும் செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X