தமிழ்நாடு

இது தேவைதானா : பஸ் படிக்கட்டில் மாணவர்கள் சாகசம்: தேவை விழிப்புணர்வு

Added : ஜன 10, 2020
Advertisement

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் பஸ் படிக்கட்டில் ஆபத்து பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் , கல்வி நிறுவனங்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் பெரும்பான்மையான தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மாணவர்கள் வந்து செல்வதற்கு பஸ், வேன் இயக்குகின்றன. அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வந்து செல்ல வெளி பஸ்களைதான் பயன்படுத்துகின்றனர்.

பொதுவாக கிராம பகுதிகளில் போதிய பஸ் வசதி கிடையாது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. வேறு வழியின்றி ஆபத்து என தெரிந்தும் நேரத்திற்கு பள்ளி , கல்லுாரிக்கு செல்ல அதிகமான மாணவர்கள் பஸ்சில் பயணிக்கின்றனர். கூட்டம் நெரிசலால் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் ஏராளமான தனியார் கல்லுாரிகள் உள்ளன. கல்வி நிறுவனங்கள் பஸ் இயக்கினாலும் பெரும்பான்மையான மாணவர்கள் வெளி பஸ்களில்தான் சென்று வருகின்றனர். இப்பகுதியில் அதிகளவில் பஸ் வசதி உண்டு. ஆனாலும் தனியார் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர். தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் கட்டணத்திற்கு ஆசைப்பட்டு இதை கண்டுகொள்வதில்லை. திடீரென பிரேக் அடித்தாலோ வளைவிலோ சிறிது தடுமாறினாலும் படியில் தொங்கும் மாணவர்கள் கீழே விழ வாய்ப்புள்ளது.

எத்தனையோ முறை இதுபோன்ற அசம்பாவிதம் நடந்துள்ளது. பள்ளி, கல்லுாரி துவங்கும் மற்றும் முடியும் நேரத்தில் போலீசார் , படியில் பயணம் செய்யும் மாணவர்களை எச்சரிக்க வேண்டும். மேலும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு இதுகுறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெற்றோரும் அவர்களை கண்டிக்க வேண்டும். இதன் மூலமே பஸ் படிக்கட்டு பயணத்தை குறைக்க வழி பிறக்கும்.

பள்ளி,கல்லுாரி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. போலீசார் பள்ளி, கல்லுாரி நேரத்தில் மட்டுமாவது இவர்களை கண்காணிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் கல்வியை போதிப்பதோடு நின்று விடாமல் இதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். மேலும் அதிகமாக ஆட்களை ஏற்றி செல்லும் பஸ்களின் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-

- பிரகாஷ், சிவகாசி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X